"பகவன்"=="பகலவன்"

என் தாத்தா, அதாவது அம்மா வின் தந்தை தீவிர தமிழ் விசுவாசி. திருக்குறளை விரும்பி படித்து அதற்கு உரை எல்லாம் எழுதி இருக்கிறார். பாவம், அந்த மிடில் கிளாஸ் மாதவனால், அதை வெளியிட எல்லாம் முடியவில்லை. வாழ்கையோடு போராடுவதிலேயே காலம் ஓடி விட்டது. ஆனால் அவர் திருக்குறளை பற்றி சொன்ன ஒரு கருத்து என்னுள் ஆழ பதிந்து விட்டது. நமது முதலாம் குரலை பற்றியது தான் அது.


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

இதில் வரும் "பகவன்" என்னும் சொல்லை கவனியுங்கள். இதை வள்ளுவன் தாய் தந்தையரை குறிக்கிறான் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் பகவன் என்பது தமிழ் சொல்லா?? நிச்சயமாக அப்படி தெரிய வில்லை. "பகவான்" என்றோர் சொல் உண்டு. ஆனால் அது சுத்த வட மொழி சொல். எனவே இதை கையான்டிருக்க கூடுமோ என்ற பேச்சுக்கே நாம் செல்லல் ஆகாது. பின் எதை தான் சொல்லா எத்தனித்து இருப்பான்?? என் தாத்தா சொல்லும் அருமையான விளக்கம் இதோ.,
"பகலவன், என்ற சொல்லை எங்கே மறந்து விட்டீர்கள் தமிழர்களே?, சூரியன் என்பது வட மொழி சொல். அதற்கு சரியான தமிழ் பதம் பகலவன் தானே?!! தனது முதல் குறளை ஏன் தமிழரின் முதற் கடவுள் ஆன பகலவனை வணங்கி வள்ளுவன் தொடங்கி இருக்க கூடாது?!!. அப்பகலவன் ஏன் திரிந்து பகவன் என்று மாறியிருக்க கூடாது??!! "
எப்படி?? என்னை மிகவும் யோசிக்கவும், வியக்கவும் வைத்த கருத்து இது!!

தமிழ் அன்பர்களே!! உங்களது கருத்துகளையும் இதை பற்றி பதிவு செய்யுங்களேன் :-)

Posted in |

3 comments:

  1. Jagaveran Says:

    பகலவன் என்பதுதான் சரியாக இருக்கும். எழுத்துகளுக்கு தலையாக இருப்பது "அ" கரம். இந்த உலகத்திற்குத் தலையாக இருப்பது சூரியனே. ஆதியிலே தோன்றிய பகலவன் என்பதே சரி. இது மாத்திரமல்ல அடுத்த ஒன்பது குறள்களும் குரு வின் சிறப்பையே கூறுவதாகத் தெரிகிறது. கடவுளுக்கு இங்கே இடம் இல்லை.

  2. Unknown Says:

    திருக்குறளில் எந்த சொல்லும் திரியவில்லை. பகவன் என்பது வட்சொல்லே.

  3. Ranganathan Says:

    வடசொல் என்று பொதுவாகக் கூறுதல் தவறு குறிப்பாக எந்த மொழி எனக்கூறவேண்டும் இன்று தமிழே உலகில் உள்ள மொழிகளின் அடிப்படை என்ற கருத்து பல ஆய்வுகளால் புலனாகி வருகிறது