வெட்டுபுலி - தமிழ்மகன்!

வெட்டுபுலி நாவலை படித்து முடித்த சூட்டோடு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். இப்போதைக்கு இருக்கும் சில எண்ண தெறிப்புகளை எழுதி வச்சுக்கலாம்னு...

படிச்சுட்டுருக்கும் போதே தோணுன விஷயம் - தமிழ்மகன் போகுற போக்குல நெறைய விசயங்கள அனாயசமா explain பண்ணிட்டு போறார். பெரியாரின் கடவுள் மறுப்பும், பிராமன எதிர்ப்பும் ரொம்ப விரிவா அலசபடுது. ஆனா கடைசி பிரபாஸின் அப்பா மூலம் ஒரே ஒரு வசனம் தான் இட ஒதுக்கீடு பத்தி வருது. மத்த யாரும் அத பத்தி பேசவே இல்லையா?? பிராமன எதிர்ப்பு தேவையில்லேன்னு பேசுற மத்த ஜாதிக்காரங்க இட ஒதுக்கீடு பத்தி என்ன கருத்து வச்சுருந்தாங்க??

இத பத்தி யோசிச்சுட்டே இந்த விமர்சனத்த படிச்சேன் . அதுல அவர் பஞ்சாயத்து தேர்தல்களை பத்தி தமிழ்மகன் ஒண்ணுமே எழுதலேன்னு வருத்தபட்றாரு. எனக்கும் நியாயம்னு தான் படுது. முக்கால்வாசி  கிராமங்களையே வச்சு வர நாவல்ல, திராவிட இயக்கத்த மையச்சரடா வச்சு ஓடுற நாவல்ல தேர்தல் இல்லாதது பெரிய கொற தான்.

மத்தபடி yuvakrishna , "காலயந்திரம் இன்னமும் விஞ்ஞானத்தால் கண்டறிப்படவில்லை. பரவாயில்லை. நம் எழுத்தாளர்களிடம் பேனா இருக்கிறது" இப்பிடி சொல்றாரு. 100% உடன்படுகிறேன். அப்படியே என் தாத்தன் பாட்டன் வாழ்ந்த வாழ்கை எல்லாம் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்த மாதிரி ரொம்ப பிரமிப்பா இருக்கு! 

என் அம்மா வழி தாத்தா குடும்பம் கிட்டத்தட்ட திராவிட குடும்பம் தான். என் தாத்த எனக்கு ஈழத்தமிழர் போராட்டத்தையும், மிக தீவிரமா இந்தி எதிர்ப்பு போராட்டத்த பத்தியும் நெறையவே சொல்லிருக்காரு. இந்த நாவல்ல வர்ற மாதிரியே கலைஞரயும் வெறுக்க முடியாம, MGRயும் வெறுக்க முடியாம - காலம் பூரா பெரியார பத்தியே பேசிட்டு செத்து போன லட்சகணக்கான திராவிட மனுசங்கள்ல ஒருத்தர்.

'பிராமண  எதிர்ப்பு' - இந்த பயன்பாடே தப்புன்னு நெனப்பேன். அவுங்கள எதிர்க்க வேண்டியது இல்ல. தாண்டி முன்னேறனும். சும்மா எதுக்கெடுத்தாலும் அவுங்கள கொற சொல்ற திராவிட அரசியல  நெறைய தடவ விமர்சனம் பன்னிருக்கேன். வரலாறு நெடுகிலும், இதே விமர்சனத்தை திராவிட இயக்கம் மீது வைத்தவர்கள் இருந்தாங்கனு இந்த நாவல் மூலமா தெரிஞ்சுக்குறோம். தமிழ்மகன் மேல மரியாத பலமடங்கு அதிகமாகுது :-) 

வெறுப்பை பரப்புகிற எந்த அரசியலும் நிச்சயம் வெற்றி பெறாது. நிதர்சனம். பின்னாடி திராவிட ஆட்சிக்கு ஒரு பிராமண பெண் தலைவரனாதை, திராவிட இயக்கத்தின் வெறுப்பரசியல் மீது வரலாறு செய்த மூர்க்கமான பகடி என்றே எடுத்து கொள்கிறேன். 

போன நூற்றண்டில தமிழகம் எப்டியெல்லாம் இருந்துச்சு, எப்டி வாழ்ந்தாங்க, யார் சொல்றத கேட்டாங்க, அரசியல் எப்டி இருந்துச்சு, யார எதிர்த்து பேசுனாங்க, எதுல பயணம் பன்னாங்க, என்ன சாப்ட்டாங்க - இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா 'வெட்டு புலி' படிங்க. ஒரு பருக்கை பதம் இந்த புத்தகம் :)

இப்போதைக்கு இவளோ தான். ஒரு புத்தகம் இப்டிலாம் பதிவு எழுதுற அளவுக்கு என்ன பாதிச்சு ரொம்ப நாள் ஆச்சு!

 I am impressed, தமிழ்மகன்!