சுஜாதா !!!

சொல்லும் போதே ஒரு தனி உற்சாகம் பிறக்கிறது.
என்ன மாதிரி எழுத்து யா?? சே, ஒரு சூரியன், ஒரே ஒரு அஞ்சா நெஞ்சன் இந்த மாதிரி புருடா கெல்லாம் நடுல ஒரே ஒரு சுஜாதா தான்னு சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும். சுஜாதா இயல்னு புதுசா தமிழ் இலக்கியத்துல ஒரு பிரிவு கொண்டு வந்தா, அதுக்கு முதல் ஆதரவு குரல் என்னோடது தான்.:-)

இன்னும் அழகா நியாபகம் இருக்கு! ஒன்பதாவது படிக்கும் போது, விகடன்ல கற்றதும் பெற்றதும்ல ஆரம்பிச்சது. அம்மா கிட்ட பிறகு சுஜாதா பத்தி கேட்டு, புத்தகங்களை தேடி படிக்கச் ஆரம்பிச்சு, இன்னைக்கு வரைக்கும் அந்த எழுத்து மேல உள்ள ஆச்சர்யம் குறையாம இருக்கேன். சுஜாதா நூல் எதையாவது எடுக்கும் போதெல்லாம் விரல் தானா மூக்குக்கு போய்டுது ;-)

இளமை, வசீகரம், ஆழமான அதே சமயம் எளிமையான கருத்து, நக்கல், நையாண்டி, அழகான நடை என்ன தான் இல்ல?? என்னோட முக்கால்வாசி கருத்துக்களுக்கும் சுஜாதா சொல்ற கருத்துக்களுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கும். கடவுள நம்புறதுல தொடங்கி, சூப்பர் ஸ்டார் சினிமா வர. :-S . ஆனாலும் அந்த முரண்பட்ட எழுத்துகள் மேல கூட ஒரு தனி காதல் எனக்கு. Tat's சுஜாதா!

தொப்புள்ள பஞ்சு வரதுல இருந்து குவாண்டம் physics, சங்க கால இலக்கியம், எங்க காலத்து காதல் வரைக்கும் ஒரே நூல்ல எழுதுறது உங்களால தான் BOSS முடியும்!! உங்கள் இழப்பு நிச்சயம் ஈடு கட்ட முடியாத ஒரு நிகழ்வு:-( We really miss you dude!

என்னடா இவன் திடீர்னு சுஜாதா பத்தி பேச ஆரம்பிச்சுட்டான்னு பாக்குறீங்க :-S
சுஜாதாவின் 50 விஞ்ஞான சிறுகதைகள் னு ஒரு அருமையான நூல் கைல தவழ்ந்துட்டு இருக்கு!!
அதோட பாதிப்பு தாங்க:-)

பொருளாதார சீரழிவு- கணினியாளனின் பார்வையில்!

சமீபத்தில் விகடனில் இக்கவிதையை சந்திக்க நேர்ந்தது.
கவிஞர்- செல்வேந்திரன்
தலைப்பு-கற்றதனால் ஆன பயன்...

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தை கெடுத்தோம்
என்றொரு புகரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிளித்தீர்கள்
பெண் குடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பளத்தின்
பெரும் பகுதியை
வரியென புடுங்குனீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களில் இருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டுனீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுதெருவுக்கு வந்து விட்டோம்
சந்தோசம் தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளை பற்றி
கேட்கிறோம்....
' கணினி மொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம் ?'

சவுக்கடி கவிதை -1 (பார்பன சதிகள்! )

“ சாதி மான்கள் சதித்துக் கொன்ற

மதுரை வீரனுக்கே

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமாம்

திண்ணியத்தில் மட்டுமல்ல

தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது பீயை
என்சனம்”

.தமிழ் செல்வனின் வலை பூவில் கண்டது.

கவிஞர் மதி வண்ணனின் கவிதை என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கவிதையின் பின்னணியையும் அவரே விளக்கியுள்ளார்.

"அதிலிருந்து,
சிவன்,விஷ்ணு,அல்லா,ஏசு என எல்லாப் பெருந்தெய்வங்களுக்கும் புனிதமான பிறப்புக்கதைகள்
இருக்க மக்கள் சாமிகளான மாரியாத்தா ,காளியாத்தாக்களெல்லாம் சாதாரணமாக
சாணி பொறுக்கப் போன இடத்தில் ஆதிக்க சாதியாரால் வல்லாங்கு செய்யப்பட்டுக்
கொல்லப்பட்டவர்களாகவோ மதுரைவீர சாமியைப்போல சக்கிலிய குலத்தில் பிறந்து
உயர்சாதியான நாயக்கர் வம்சத்தில் பிறந்த பொம்மியைக் காதலித்த குற்றத்துக்காகக்
கொல்லப்பட்டவராகவோ இருக்கிறார்கள்."


சே, எவ்வுளவு ஏமாளி பிண்டங்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!! :-)

"பகவன்"=="பகலவன்"

என் தாத்தா, அதாவது அம்மா வின் தந்தை தீவிர தமிழ் விசுவாசி. திருக்குறளை விரும்பி படித்து அதற்கு உரை எல்லாம் எழுதி இருக்கிறார். பாவம், அந்த மிடில் கிளாஸ் மாதவனால், அதை வெளியிட எல்லாம் முடியவில்லை. வாழ்கையோடு போராடுவதிலேயே காலம் ஓடி விட்டது. ஆனால் அவர் திருக்குறளை பற்றி சொன்ன ஒரு கருத்து என்னுள் ஆழ பதிந்து விட்டது. நமது முதலாம் குரலை பற்றியது தான் அது.


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

இதில் வரும் "பகவன்" என்னும் சொல்லை கவனியுங்கள். இதை வள்ளுவன் தாய் தந்தையரை குறிக்கிறான் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் பகவன் என்பது தமிழ் சொல்லா?? நிச்சயமாக அப்படி தெரிய வில்லை. "பகவான்" என்றோர் சொல் உண்டு. ஆனால் அது சுத்த வட மொழி சொல். எனவே இதை கையான்டிருக்க கூடுமோ என்ற பேச்சுக்கே நாம் செல்லல் ஆகாது. பின் எதை தான் சொல்லா எத்தனித்து இருப்பான்?? என் தாத்தா சொல்லும் அருமையான விளக்கம் இதோ.,
"பகலவன், என்ற சொல்லை எங்கே மறந்து விட்டீர்கள் தமிழர்களே?, சூரியன் என்பது வட மொழி சொல். அதற்கு சரியான தமிழ் பதம் பகலவன் தானே?!! தனது முதல் குறளை ஏன் தமிழரின் முதற் கடவுள் ஆன பகலவனை வணங்கி வள்ளுவன் தொடங்கி இருக்க கூடாது?!!. அப்பகலவன் ஏன் திரிந்து பகவன் என்று மாறியிருக்க கூடாது??!! "
எப்படி?? என்னை மிகவும் யோசிக்கவும், வியக்கவும் வைத்த கருத்து இது!!

தமிழ் அன்பர்களே!! உங்களது கருத்துகளையும் இதை பற்றி பதிவு செய்யுங்களேன் :-)

Posted in | 3 comments