ராவணன்!



ஆங்கில படங்களுக்கு நிகரான காட்சி அமைப்புகள்!

காடு, மேடு பாறை, அருவியில் எல்லாம் சுத்தி சுழன்று பிரமிக்க வைக்கும் காட்சிகள்,

மிரட்டலான நடிப்பு, சண்டை காட்சிகள். அதுவும் அந்த தொங்கும் பாலத்தில் நடக்கும் உச்சகட்ட சண்டை காட்சி, அப்படியே மயிர் கூச்செறிய வைக்கிறது! நெடுநாளைக்கு இந்திய சினிமாவில் பேசப்படும்.

விவரிக்க முடியாத அளவுக்கு சிறப்பான இசை, ஒளிப்பதிவு, இயக்கம் இன்ன பிற,

சிறப்பாக இல்லையென்றாலும், குறை ஒன்றும் சொல்ல முடியாத திரைக்கதை, வசனம்!

ஆக, இதுல்லாம் சேர்த்து ராவணனை இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக நிறுத்தி விடும்.

மணி மறுபடியும் தன்னை அழுத்தம் திருத்தமாக நிருபித்து விட்டார்!

ஆனாலும் இராவணன், என்னை போன்ற ஒரு சாமானிய தமிழ் ரசிகனுக்கு அந்நியமாகவே கடந்து போகிறான்.

இது எங்கள் ஊர் கதை அல்லவே! படத்தில் தமிழ்நாட்டு அடையாளங்கள் சுத்தமாக இல்லை :( எதோ ஆங்கில, அல்லது இந்தி படத்தை டப்பிங்கில் பார்த்தது போல் இருக்கிறது.

தமிழ்ல படம் எடுக்குறதெல்லாம் சரி தான். எப்போ தமிழ் படம் எடுக்க போறீங்க மணி சார் ??
கடைசியா ஆயுத எழுத்துன்னு ஒரு தமிழ் படம் எடுத்ததா ஞாபகம்!

தமிழ் ரசிகன் காத்திருக்கிறான்!






ஈழம் - ஞாநி - அறிவுமதி!

ஞாநியின் எழுத்துகளை, அவரது நிறைய கருத்துகளை விரும்பி படித்தாலும் ஈழம், சிங்கள இனவாதம் குறித்து அவர், "தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக, ஜனநாயக முறையில் அனைத்தையும் மறந்து விட்டு வாழவேண்டும்" என்கின்ற தொனியில் எழுதும் போது, உச்சபட்ச கோபத்தில் சில பல கெட்டவார்த்தைகளை மனதிற்குள் முனுமுனுப்பேன்! மத்தபடி அதை வெளிபடுத்தும் வார்த்தைகள் வராது.

இப்போது, அறிவுமதி அண்ணனின் இந்த பதிவில், வரும் இவ்வரிகள்,

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது



என் கோபத்திற்கு மிகச்சரியான காரணம், அதன் வெளிப்பாடு இந்த வரிகள் தான்!!

மீண்டும் சுஜாதா!

அண்ணாத்தையின், "விஞ்ஞான சிறுகதைகள்" தொகுதி முழுவதும் படிச்சு முடிச்சிட்டேன்! என்ன மனுசன்டா சாமி??!!!
எவ்வளோ பெரிய கற்பனை எல்லாம் எனைய மாதிரி tube-light கூட கற்பூரம் மாதிரி புரிஞ்சுக்குற style-ல எழுதுறதுக்கு சுஜாதாவ விட்டா ஆளே இல்ல :D

அவதார் james cameron எல்லாம் பிச்ச எடுக்கணும் போல இவர்கிட்ட!!

"Keep it simple, sweet and stupid!" என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு கதையும் ஒரு ஆழமான அறிவியல் முன்னேற்றத்தை, எதிர்பார்க்கப்படும் கண்டுபிடிப்புகளை பாமரனின் மொழியில் சொல்லபட்டிருக்கிறது!

அதாவது கணினி உலகில் கூறப்படும் abstraction - தேவையான தகவல்களை *மட்டும்* தேவையானவர்களுக்கு தருவது - என்றதன் அடிப்படையில், ஒரு சாதாரண வாசகன் ஒரு விஞ்ஞான கதையில் வரும் சயின்ஸ் சமாச்சாராங்களை
அல்வா சாப்டற சந்தோசத்துடன் படிக்கச் செய்து, அதன் பின்னால் இருக்கும் இடியாப்ப சிக்கல் அறிவியல் கோட்பாடுகளை லேசாக தொட்டு சென்றுள்ளார். :)

மொத்தத்தில் ஒரு மிக சிறந்த புத்தகம்!

உயிர்மை வெளியீடு.

வீர வணக்கம்!

நாளை எம் இனத்திற்காக இன்னுயிர் ஈத்த திரு.முத்துகுமரன் அவர்களின் முதல் வருட நினைவு நாள்.
இங்கே மதுரையில் பாராளுமன்றத்தில் தைரியமாக உட்காந்திருக்க கூட வக்கில்லாத அஞ்சா கு, சாரி நெஞ்சனுக்கு பிறந்த நாளாம். ஊரையே மறைத்து விளம்பர தட்டிகள் வைத்து அசிங்கபடுத்தி இருக்கிறார்கள்.
நடுவுலே ஏதாவது உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தும் தட்டிகள் வைத்தல் கூட தெரியாது போல :(
சரி நம்மளால முடிஞ்சது - ஒரு பதிவாவது எழுதுவோம்னு....

நெறைய பேசியாச்சு சொல்லியாச்சு! முத்துகுமரன் தற்கொலை செய்து கொண்டவர். அவரை எவ்வாறு ஒரு வீரனாக கருத முடியும் என்று நெறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். ஆனா அவருடைய கடைசி கடிதத்தை முழுசாக படித்தவர்கள் உண்மையை புரிந்திருப்பார்கள்.

ஒரு மோசமான நிலைமையை எதிர்கொள்ள தைரியம் இன்றி தப்பிக்க நினைத்து தற்கொலை செய்பவர்கள் கோழைகள்!! தமக்கு போராட களம் கிடைத்தும் அதை தவறவிட்டு, களமிறங்க அச்சம் கொண்டு ஓடுகிறவர்கள் கோழைகள்!! ஆனால் அந்த களம் அமைவதற்கு ஒரு உயிர் வேண்டும், அதற்கு நான் என்னை தருகிறேன் என்று முன்வந்த எங்கள் மாவீரன் முத்துகுமரன்.

தன் உடலையே ஆயுதமாக ஏந்தி போராட வேண்டி அவன் உயிர் நீத்தான்! போரட்டதற்கு அஞ்சி உயிர்நீக்கவில்லை.

அவருடைய கடைசி எழுத்துக்கள் உணர்ச்சிபெருக்கில் உயிர் போகும் அவசரத்தில் எழுதியவை அல்ல! மிக சிறந்த ஆழமான கருத்தாழம் மிக்க ஒருவனுடைய மனக்குமுறலையும், போராட்ட நெறிமுறைகளையும் விளக்குவதாக இருந்தது!!

இத்துடன் அந்த கடிதத்தை இணைத்து நான் இட்ட பதிவின் லிங்கை[1] இணைத்துள்ளேன்.

திரு.முத்துக்குமார் அவர்களுடைய அசைகளில் ஒன்றை கூட நாம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் ஊரை சுரண்டும் படிக்காத தற்குறி _____ ஒன்று இங்கு ஊரையே அசிங்கபடுத்தி பிறந்த நாள் கொண்டாடுகிறது!!

என்ன கேவலமான புழுக்களை போன்ற வாழ்க்கை இது??

[1] http://azhaguselvan.blogspot.com/2009/02/blog-post.html

பொங்கல் - என்னத்த சொல்ல!!

தனிப்பட்ட முறைல இந்த தடவை பொங்கல் ஒன்னும் சிறப்பா கொண்டாட முடியாத சூழ்நிலை எனக்கு :(

ஆனா ஒரு விஷயம் என்ன னா, எனக்கு வாழ்த்து சொன்ன நண்பர்கள், உறவினர்களில் 95% பேர் சொன்னது "happy pongal" தான். சரி இவனுங்க எவளோ சொன்னாலும் திருந்தாத சொரண கெட்ட திருவாளர்கள் தானேனு நா திருப்பி "பொங்கல் வாழ்த்துகள்" சொன்னா அதுக்கு நக்கலா மேலயும் கீழேயும் என்னை ஒரு பார்வை வேற!!!

என்னத்த சொல்ல!! ஹ்ம்ம்

புத்தாண்டு வாழ்த்துகள் தோழர்களே :)