நாம் தமிழர்!!

வீழ்ந்து விடாத வீரம்! மண்டியிடாத மானம்!!
என்ற கோஷத்துடன் முள்வேலி முகாமில் சிக்கி தவிக்கும், 3.5 லட்சம் தமிழர்களை காப்பாற்ற வேண்டி சீமான் அழைத்த கூட்டத்திற்கு, *மானமுள்ள தமிழனாய்* சென்று வந்தது ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது. என்னை போல், எம் இலங்கை சகோதரர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டி முடியாமல் மனதிற்குள் வெம்பி தவிக்கும் ஆயிரக்கணக்கான மானமுள்ள தமிழர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

சாதி ,மதம் அனைத்தையும் தாண்டி தமிழனை கட்டுப்படுத்தும் பெரும் பூதமாய் அரசியல் கட்சிகள் மாறி இருப்பதாய் கண்கூடாய் பார்க்கமுடிந்தது. தமிழன் என்ற உணர்வு சேர்த்தாலும், நான் இந்த கட்சிக்காரன் என்ற ஈகோ தான் பெரிதாக போகிறது. கட்சிகளை சாராத so-called நாகரிக, மிடில் கிளாஸ் தமிழனுக்கு தமிழ், தமிழுணர்வு இதை பற்றியெல்லாம் அக்கறையே இருப்பதில்லை. அக்கறை கொண்ட பெரும்பான்மை பாமர தமிழனும் கட்சி வேறுபாடுகளால் சிதறி ஓடி விடுகிறான். அதனால் தான் இவ்வுளவு துரோகம் செய்தும் காங்கிரஸ் நாதரிகளால் "இப்பாரினில் சிறந்த நற்றமிழ் நாட்டில்" கட்சி நடத்த முடிகிறது. இதையே இவர்கள் கர்நாடகத்திலோ, மகாராஷ்டிராவிலோ செய்து விட்டு தேர்தலில் வெற்றியும் பெறுவதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இதனை தடுத்து கட்சி பேதங்களை தாண்டி மக்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக இந்த "நாம் தமிழர்" முயற்சியை இவர்கள் மேற்கொண்டு இருப்பது ஆறுதல் தரும் ஒன்று. இதற்கான வழிமுறைகளில் ஒன்றாக மேடையில் கட்சி வேட்டி கட்டிய எவரையும் ஏற அனுமதிக்கவில்லை.
மேலும், இங்குள்ள அனைத்து கட்சிகளும் எதோ ஒரு வகையில் ஈழ பிரச்சனையில் நமக்கு துரோகம் செய்து வரும் போதிலும், அத்தலைவர்களை பற்றிய விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டன.
இவ்வாறாக தமிழனை ஒன்றிணைத்து கூட்டம் வெற்றிகரமாகவே நடந்தது. கூட்டமும் திருப்தியான அளவிற்கு கூடியதாகவே எனக்கு பட்டது. சீமான் பேச்சில் எப்பொழுதும் இருக்கும் வேகம் சற்று குறைவாய் இருந்தது, சில தமிழர்களின் ஏமாற்றத்துக்கு காரணமாக போனாலும் அதற்கான காரணிகளை அவர்கள் தெளிவாய் கூறிவிட்டார்கள். இந்த புதிய முயற்சியும் நம்பிக்கை தருவதாய் உள்ளது.

கூட்டத்தில் பேசியவர்கள் உதிர்த்த சுவராஸ்யமான, என்னை கவர்ந்த பகுதிகளை அடுத்த இடுகை இல் குறிப்பிடுகிறேன்.