பெரியாரை அறிவோம்- கம் ஆன் மை தமிழ் people

யாரப்பா இந்த பெரியார்??? நான் அணிந்திருந்த பெரியார் படம் போட்ட t-shirt ஐ பார்த்து பல நண்பர்கள் கேட்ட கேள்வி இது. முதலில் கோபமாக தான் வந்தது. அப்புறம் யோசித்து பார்த்தால், இந்த மனிதரை பற்றி நானே எங்கே கேள்வி பட்டிருக்கிறேன். என் வீட்டில் பெரியாரை பற்றி பேசி, கேள்விப்பட்டு வளர்ந்ததனால் எனக்கு அவரை பற்றி தெரிந்திருக்கிறது. இல்லேன்னா எப்படி???
பாட நூல்களில் கிடையாது. டிவி யில் இந்த மாதிரி மனிதர்களின் பேரே வருவதில்லை. அரசியல் கட்சி பெருமக்களும், இப்போலாம் பெரியார் ங்கற வார்த்தையே use பன்றதில்ல.
மக்கள் சுத்தமா மறந்துட்டாங்க. பின்ன எப்படி பசங்க தெரிஞ்சுபாங்க??
இன்னமும் பெரியார் பேர கேட்டாலே காத பொத்துகிற //தமிழ் தாய்மார்கள்// இருக்க தன் செய்கிறார்கள் என்பது வெட்க கேடு :-(
இவங்க எப்படி பசங்களுக்கு பெரியார் இன் பெருமைகளை சொல்லுவாங்க. இவங்களுகே ஒரு தனி class எடுக்கனும் போல.
கேட்டா அவர் கடவுளை எதிர்த்தவர், மதத்தை வெறுத்தவர் சொல்றாங்க.
அவ்ளோ பெரிய தலைவர வெறும் கடவுள் எதிர்பாளரா மக்கள் முன்னாடி முன் நிறுத்து இருப்பது நாம அவருக்கு செய்யுற எவ்ளோ பெரிய துரோகம் தெர்யுமா??
அவர் மகளிர் முன்னேற்றம், சாதி ஒழிப்பு போன்ற துறைகளில் ஆற்றிய மாபெரும் பனிய இன்றைய இளைஞர்களிடம் எடுத்துட்டு போறது நம்ம கடமை இல்லையா??
பொட்டலம் போட வேண்டிய நானும், மாடு மேய்க்க என் நண்பனும் இன்னைக்கு engineer ஆக போறோம்னா அதுக்கு உழைச்சது அந்த உயர்ந்த உள்ளம் தான??
அவர நெனச்சு வணங்க வேணாம். ஆனா இவர் யாருன்னு என் நண்பர்கள் கேகுரதெல்லாம் என்னால் பொறுத்துக்கவே முடியல.
வெளிப்படையா சொல்லனும்னா அருவெறுப்பா இருக்கு தமிழ்ர்களே!!
தயவு செஞ்சு அவர பத்தி தெரிஞ்சுகோங்க. உங்க நண்பர்கள்,உறவினர்கள், பிள்ளைகள் எல்லார்டையும் பேசுங்க அவர பத்தி.
"பெரியார்" ன்னு ஒரு படம் வந்துச்சு. எத்தனை பேர் பார்தேங்கனு தெரியல. எல்லாம் மெட்டி ஒலியும்உம், மன்மத ராசவுலயும் மூழ்கி இருந்திருபீங்கனு நெனக்குறேன்.
உங்களுக்காக நம்ம அரசு அந்த படத்துக்கு வரி சலுகை லாம் தந்துச்சு. நீங்களாம் வந்து பாக்கணும்னு. உங்களுக்கெல்லாம் தன் நேரம் இல்ல பாவம். என்ன பண்ணுவீங்க??
கேவலம், ஒரு bit படத்துக்கு வர்ற கூட்டம் கூட இல்ல நா போனப்போ!!!
சரி விடுங்க, இனிமேயாவது அந்த படத்த DVD ல வாங்கி பாருங்க.
உங்க வீட்டு இளைய சமுதாயதிட்டையும் போடு காட்டுங்க.
உங்களுக்காக தான்னோட 95 வயசு வரைக்கும் போராடிய ஒரு மனுசனுக்கு நீங்க காட்ற குறைந்த பட்ச நன்றி கடனா அது இருக்கட்டும்.
இனியும் அந்த t-shirt பாத்து அப்படி கேள்வி கேக்குற ஒரு தமிழன் இருக்க கூடாதுங்கறது தான் என்னோட சிறிய கனவு.
மாறுங்கப்பா!!!!!
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!! :-)

Posted in Labels: | 1 comments