தெலுங்கானாவும் - என் மனகுமுறல்களும்

வணக்கம் !

ஆந்திராவில் நடந்து வரும் தெலுங்கனா பிரச்சனைகளை கவனித்து வருவோர் அனைவரும் கீழ்க்கண்ட கூற்றுகளை புரிந்து கொள்ள முடியும்.

1 . தாம் கொண்ட லட்சியத்துக்காக வீதிக்கு வந்து போராடும் குணம் அம்மக்களுக்கு இருக்கிறது

2 . தன்னலமோ பொது நலமோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போராடும், அழகாக அதை முன்னெடுத்து செல்லும் தலைவர்கள் இருக்கிறார்கள்.

3 . ஆளும் வர்கத்திற்கு வன்முறை தான் செருப்பால் அடித்த மாதிரி புரியும் என்கிற தெளிவு அவர்களுக்கு இருக்கிறது. அதை சரியான பாதையில் கொண்டு செலுத்த தலைவர்களும் இருக்கிறார்கள்.

4 . எல்லாம் விட விடாமுயற்சி இருக்கிறது. கொண்ட லட்சியத்துக்காக அசராமல் போராடும், போராட்டத்தை ஊக்கிவிக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள்.


இக்குனங்களில் ஒரு சில நமக்கும் இருந்திருந்தால் நாம் நமது தமிழ் சொந்தங்களை சிறிதேனும் காப்பாற்றி இருக்கலாமே! இதை போல் உயிர் துறக்க துணிந்த ஒரு தலைவன் எமக்கு இல்லையே.

எங்களை போராட்ட களத்தில் கொண்டு செலுத்த ஒரு தலைவன் நம்மிடம் இல்லையே.

ஒரு சிலர் அழைத்த போதும் வீதிக்கு வர நாம் தயாராக இல்லையே. வெட்கங்கெட்ட தமிழினமே.!!

வன்முறை தான் ஆளுவோருக்கு புரியும் என்று நம்மை யாரும் தெளிய வைக்க வில்லையே! அவ்வாறு போராடிய எம் தலைவனையே, சொந்த சகோதரனையே தீவிரவாதி என்று சொன்ன மக்கள் அல்லவோ நாம்!

நாம் பேசியது தான் இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? ஒரு நாட்டை துண்டாடுவது இறையான்ன்மைக்கு எதிரானது இல்லையா?
பின்னர் எப்படி பொத்தி கொண்டு சம்மதிக்கிறார்கள்??
கேட்கிற விதத்தில் கேட்டால் எவனும் குடுப்பான்.
நாம் இளிச்சவாயர்கள்! நமக்காக கேள்வி கேக்க எவன் இருக்கிறான். அப்படி இருக்க நம் கோரிக்கைகளை எதற்காக அவன் கேட்க வேண்டும்?
சீமான் அண்ணன் சொன்னது போல - "தமிழ் நாட்டில் எவரேனும் தமிழனுக்கு எதிராக எழுதினால் அவன் கை யை மனிகட்டோடு வெட்டி எறிவோம் என்ற பயத்தை நாம் உண்டாக்க தவறி விட்டோம்". அந்த பயம் தான், அந்த வன்முறை பயம் தான் இன்றைக்கு தெலுங்கான வை பெற்று தந்துள்ளது.

இதே பயம் தான் நமக்கும் ஹிந்தி யை விரட்ட உதவியது. அப்போது தன்னலம் கருதா தலைவன் இருந்தான், போராட தூண்டினான், தேவைபட்டால் வன்முறை செய்யவும் கற்று குடுத்தான். இப்பொழுது அப்படி யார் இருக்கிறார்கள்? அல்லது மக்களாகிய நாம் தான் தயாராக இருக்கிறோமா?? 5௦௦ ரூபா குடுத்தால் எவன் நமக்கு முழு எதிரியோ அவனுக்கே ஒட்டு போடு நாம ஜெய்க்க வச்சிடுவோம். அப்புறம் எங்குட்டு போராட்டம் எல்லாம்?!!

கொஞ்சமேனும் நம்மை பற்றிய அக்கறையோ பயமோ இருந்தால் இவ்வுளவு மீனவ சொந்தங்களை சிங்கள பொறிக்கிகள் கொன்ற பிறகும் கச்ச தீவு முடிந்து போன விஷயம் என சாதரணமாக மக்களவையில் SM கிருஷ்ணா அறிவிப்பானா?? அதற்கு சத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க கூட நமக்கு அங்கே பலம் இல்லை.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை செய்த போர் குற்றங்களுக்காக அவர்களுக்கு ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செயும் மற்ற நிறுவனங்களில் உள்ள அமெரிக்கர்கள் அதற்கு எதிராக ஒட்டு போட வேண்டும் என்றும் மசோதா நிறைவேற்றி உள்ளார்கள். குறைந்தபட்சம் இதை செய்ய நம்மால் முடிந்ததா??

பின்னர் எதற்கு நமக்கு ஒரு தனி மாநிலம், ஒரு முதல்வர் இதல்லாம்??

எனக்கு தெலுங்கனவின் நியாயங்கள் முட்டாள்தனங்கள் பற்றியல்லாம் கவலை இல்லை. எப்பிடி வேணா இருக்கட்டும். ஆனால் அந்த போராட்ட குணமும், ஒரு தலைவனும் நமக்கு இல்லையே என்ற மனக்குமுறல் தான் இந்த வலை பதிவு. இருந்தால் எம் சொந்தங்களின் உயிரை, உறவுகளை காப்பற்றி இருக்கலாமே!!

தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன், ஆனால் தமிழ் நாட்டில் பிறந்தமைக்கு வெட்க படுகிறேன். கூசி போகிறேன் :(