ராவணன்!



ஆங்கில படங்களுக்கு நிகரான காட்சி அமைப்புகள்!

காடு, மேடு பாறை, அருவியில் எல்லாம் சுத்தி சுழன்று பிரமிக்க வைக்கும் காட்சிகள்,

மிரட்டலான நடிப்பு, சண்டை காட்சிகள். அதுவும் அந்த தொங்கும் பாலத்தில் நடக்கும் உச்சகட்ட சண்டை காட்சி, அப்படியே மயிர் கூச்செறிய வைக்கிறது! நெடுநாளைக்கு இந்திய சினிமாவில் பேசப்படும்.

விவரிக்க முடியாத அளவுக்கு சிறப்பான இசை, ஒளிப்பதிவு, இயக்கம் இன்ன பிற,

சிறப்பாக இல்லையென்றாலும், குறை ஒன்றும் சொல்ல முடியாத திரைக்கதை, வசனம்!

ஆக, இதுல்லாம் சேர்த்து ராவணனை இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக நிறுத்தி விடும்.

மணி மறுபடியும் தன்னை அழுத்தம் திருத்தமாக நிருபித்து விட்டார்!

ஆனாலும் இராவணன், என்னை போன்ற ஒரு சாமானிய தமிழ் ரசிகனுக்கு அந்நியமாகவே கடந்து போகிறான்.

இது எங்கள் ஊர் கதை அல்லவே! படத்தில் தமிழ்நாட்டு அடையாளங்கள் சுத்தமாக இல்லை :( எதோ ஆங்கில, அல்லது இந்தி படத்தை டப்பிங்கில் பார்த்தது போல் இருக்கிறது.

தமிழ்ல படம் எடுக்குறதெல்லாம் சரி தான். எப்போ தமிழ் படம் எடுக்க போறீங்க மணி சார் ??
கடைசியா ஆயுத எழுத்துன்னு ஒரு தமிழ் படம் எடுத்ததா ஞாபகம்!

தமிழ் ரசிகன் காத்திருக்கிறான்!